Thursday, September 19, 2024

Latest Posts

ஜனாதிபதி மொட்டை பிளவுபடுத்த முயற்சிக்கவில்லை – பிரசன்ன ரணதுங்க

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை இரண்டாக பிளவுபடுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கட்சியாக இணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி எப்போதும் கூறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் நேற்று (05) இரவு பத்தரமுல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர, ரமேஷ் பத்திரன, அலி சப்ரி மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக மாவட்ட மட்டத்தில் மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியதாவது,

கேள்வி – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஜனாதிபதி பிளவுபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில் – ஜனாதிபதி எம்மைப் ஒதுக்கவோ அல்லது பிரிக்கவோ ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்பதை நான் மிகுந்த பொறுப்புடன் கூறுகின்றேன். நாட்டு மக்களின் அபிப்பிராயத்தின்படி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குமாறு அவர்கள் ஒன்றிணைந்து வேண்டுகோள் விடுத்தார்கள். கட்சியாக இணைந்து பணியாற்றுமாறு அவர் எப்போதும் கூறுவார். நடனம் ஆட முடியாதவர்களை பூமி இழுக்கும் என்பது போல் சாக்குப்போக்கு சொல்பவர்களின் கருத்தே ஒழிய இது எங்களின் கருத்து அல்ல.

கேள்வி – கட்சிக்கு ஏன் ஒரே கருத்துக்கு வர முடியவில்லை?

பதில் – இந்த மொட்டு கட்சி மக்களின் வியர்வையால் கட்டியெழுப்பப்பட்ட கட்சி. இது பணக்காரர்களுக்கு வாடகைக்கு, குத்தகைக்கு அல்லது விற்பதற்கு ஏற்ற கட்சி அல்ல. 2022 இல் ஜனாதிபதி நல்லவராக இருந்தால், அவர் தனது பொறுப்பை நிறைவேற்றியிருந்தால், அவர் ஏன் இன்று மோசமாக இருக்கிறார்?

கேள்வி- இந்த கலந்துரையாடலில் என்ன பேசப்பட்டது?

பதில் – ஜனாதிபதியின் செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடினோம். மேலும், இதுவரை முடிவெடுக்காதவர்கள் இன்று எம்முடன் பேசினர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.