சர்வகட்சி அரசாங்கம் அமைக்க இடையூறு, உண்மையை சொல்கிறார் மைத்திரி

0
146

சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்கும் செயற்பாடுகள் தடைப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கேள்வி – சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதியுடனான ஏற்பாடு எவ்வாறு உள்ளது?

பதில்– “பேச்சுவார்த்தைக்கு வரும்படி எங்களைக் கேட்டுக் கொண்டார். நாங்கள் சென்றோம். இப்போது அதைச் செய்வதற்கு அரசாங்கமே பொறுப்பு. ஆனால் இப்போது ஒரு தடை இருப்பதாக நான் நினைக்கிறேன். நாடாளுமன்றத்தில் உள்ள பலருக்கு இது பிடிக்கும், சிலருக்கு சர்வகட்சி ஆட்சி பிடிக்கவில்லை.

கேள்வி – இந்த சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒரு குழு இழுத்தடிக்கிறதா?

பதில்– “அப்படித்தான் தெரிகிறது”

கேள்வி – இவர்கள் மொட்டுவில் உள்ளவர்களா?

பதில்– யாருக்குத் தெரியாது எனவே நீங்கள் அதை கண்டுபிடிக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here