நாமல் வெல்வது உறுதி

0
116

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச நிச்சயம் வெற்றிபெறும் வல்லமை கொண்டவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று (07) அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த போராட்டத்தில் இளைஞர்களின் தலைமையை மக்கள் கோரியதாகவும், தற்போது அந்த வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும், அடுத்தது மக்களின் வாய்ப்பு என்றும் மஹிந்த தெரிவித்தார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here