என்னைப் பொறுத்தவரை இந்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு போர் அல்ல. நான் யாரிடமும் சண்டையிட வரவில்லை. நான் எனது கொள்கைகளுடன் வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உண்மையைச் சொல்லி நாட்டைக் காப்பாற்றத் தயாரா அல்லது பொய்யைக் கூறி நாட்டைக் குழப்பத் தயாரா என்பதைச் சிந்திக்க வேண்டும். நீங்கள் விரும்பினால் எனக்கு வாக்களியுங்கள். இதை முன்னெடுத்துச் செல்வேன். நான் மற்றவர்களைப் போல வாக்குறுதிகளை அளிப்பதில்லை. செய்து காட்டியுள்ளேன். ஏனையோர் வாக்குறுதிகளை வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மற்ற வேட்பாளர்கள் எனக்கு சவாலாக இல்லை. நாட்டின் எதிர்காலத்திற்காக வருகிறேன். ஏனைய வேட்பாளர்கள் தமது எதிர்காலத்திற்காக வரவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஊடக பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்