இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 600 பேர் கைது

0
193

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு பயணிக்க முயன்ற 13 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட அதிகாரிகள் குழுவொன்று வெலிப்பாறை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, ​​கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று ஆண்கள், நான்கு பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகள் உள்ளனர்.

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் வவுனியா, திருகோணமலை மற்றும் மொறவெவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, இவ்வருடம் ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்ட 600 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here