மலையக மக்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் நடைபயணம்

Date:

இன்று 08/08/2023 காலை மட்டக்களப்பில் மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு ஏற்பாடு செய்துள்ள தலைமன்னார் முதல் மாத்தளை வரையிலான மலையக எழுச்சி நடை பயணத்திற்கு ஆதரவு சேர்க்கும் வகையிலும் மலையக மக்கள் எதிர்நோக்கி உள்ள பிரச்சனைகள் தொடர்பாக கிழக்கு மாகாண மக்களிடையே விழிப்புணர்வையும் தெளிவினையும் ஏற்படுத்தக் கூடிய வகையில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சார்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மலையக மக்களின் உரிமை சார்ந்த விடயங்களில் ஆர்வம் உள்ள தனி நபர்கள் சர்வ மத தலைவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஓர் கவன ஈர்ப்பு நடை பயணத்தை மட்டக்களப்பில் மேற்கொண்டுள்ளனர். மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவின் 11 அம்ச கோரிக்கைகளுக்கு வலு சேர்ப்பதாக இந்த நடை பயணம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக...

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...