ஒதுக்கீட்டு சட்ட மூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதம் நாளை

0
168

ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதத்தை நாளை (08) நடத்துவதற்குப் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (08) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

கடன் பெறும் எல்லையை 4,979 பில்லியன் ரூபாவிலிருந்து 13,979 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் நோக்கில் இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கடந்த ஜூலை 21ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைய பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் என்பனவும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

குறித்த விடயங்கள் தொடர்பான விவாதம் நாளை மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை நடைபெறவுள்ளது. அதனையடுத்து, பி.ப. 5.00 மணிக்கு தனியார் உறுப்பினர் சட்டமூலமான இலங்கை வரிவிதிப்பு நிறுவகம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்) சட்டமூலம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அதன் பின்னர் பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு வேளையின் போதான விவாதம் இடம்பெறவுள்ளது.

அதேநேரம், கடந்த ஜூலை 21ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டமைக்கு அமைய இவ்வாரத்தின் ஏனைய நாட்களுக்கான பாராளுமன்ற அமர்வுகளின் அலுவல்கள் முன்னெடுக்கப்படும் என்றும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here