விபத்தினால் ரயில் சேவை பாதிப்பு

0
137

மீரிகம வில்வத்த பிரதேசத்தில் இன்று காலை புகையிரத கடவையை கடந்த கொள்கலன் லொறியொன்றுடன் ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பொல்ஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடனேயே இந்த கொள்கலன் வாகனம் மோதியுள்ளது.

இந்த விபத்தின்போது ரயிலில் மோதிய கொள்கலன் பெட்டி சுமார் 100 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டதால் ரயில் சிக்னல்கள், ரயில் கதவுகள், சில்லுகள் மற்றும் இன்ஜினும் பலத்த சேதமடைந்துள்ளது.

இந்த விபத்தால் வடக்கு, மலையக ரயில் சேவையில் தாமதமாக ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here