மற்றுமொரு சீன போர் கப்பல் குறித்து சர்ச்சையில் சிக்கியுள்ள இலங்கை

Date:

இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீன ராணுவத்தின் உளவு கப்பலான யுவான் வாங்-5 ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அனுமதித்துள்ளது.

இதையடுத்து அந்த கப்பல் இன்று இலங்கை வருகிறது. 17ம் திகதி வரை இலங்கை துறைமுகத்தில் அது நிறுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, பாகிஸ்தானுக்காக சீனா, பி.என்.எஸ் தைமூர் என்ற போர் கப்பலை தயாரித்துள்ளது.

ஷாங்காயில் உள்ள டோங் துறைமுகத்தில் கட்டப்பட்ட இந்த கப்பல் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மற்றும் உயர் தொழில்நுட்ப ஆயுதங்களைக் கொண்டதாகும்.

ஆகஸ்ட் 15 ஆம் திகதி கராச்சிக்கு இதை கொண்டு செல்ல சீனா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கப்பலை பங்களாதேஷ் கடல் பகுதி வழியே பாகிஸ்தானுக்குள் கொண்டு செல்ல அந்நாட்டு அரசிடம் சீனா அனுமதி கோரியிருந்தது.

ஆனால் சட்டோகிராம் துறைமுகத்தில் அந்த கப்பலை நிறுத்த பங்களாதேஷ் அரசு அனுமதி மறுத்து விட்டது.

இதையடுத்து பாக் போர் கப்பலான தைமூரை கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படையில் இணைப்பதற்காக செல்லும் வழியில், கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அனுமதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐக்கிய மக்கள் சக்தி செய்த வரலாற்று பிழை!

அமைச்சர் விஜித ஹேரத்தின் பாராளுமன்ற உரை - 2025.11.14 அரசியல் மற்றும் பொருளாதார...

புப்புரஸ்ஸ பகுதியில் 16 வயது மாணவி படுகொலை!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ மில்லகாமுல்ல காசல்மில்க் பகுதியில் 16 வயது...

மாகாண சபை குறித்து ஆராய சிறப்புத் தேர்வுக் குழு

மாகாண சபை முறைமை மற்றும் தேர்தல்களை நடத்துவது குறித்து முடிவு செய்வதற்காக...

நாமல் – சுமந்திரன் இடையில் சந்திப்பு

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...