சஜித் பிரேமதாசவால் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தாம் நான்கு வருடங்கள் சமகி ஜன பலவேகவில் இருந்ததாகவும், கட்சிக்காக பெரும் தியாகங்களை செய்ததாகவும், ஆனால் கட்சியின் தலைமை அதற்கு மதிப்பளிக்கவில்லை எனவும் பொன்சேகா குறிப்பிடுகின்றார்.
“எனக்கு அவர் மேல் நம்பிக்கை இல்லை. அதனால்தான் நான் வெளியே செல்கிறேன். அவர் நாட்டைக் கட்டியெழுப்புகிறார் என்பதை நான் புரிந்து கொண்டால், நான் அவருடன் நான்கு ஆண்டுகள் கடந்து வேலை செய்திருப்பேன். கட்சிக்காக பெரும் தியாகங்களை செய்தவர். கடந்த தேர்தலுக்கு நாங்கள் வந்தபோது, கட்சி எங்களுக்கு பதவியோ, பணமோ தரவில்லை. ஆனால் அவரது நடத்தையைப் பார்த்ததும் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. இப்போது வந்து மேடையில் நின்று கூட்டணி வைத்து படம் எடுப்பதைப் பாருங்கள். அந்த மக்களை வைத்து நாட்டை கட்டியெழுப்ப முடியுமா? என பொன்சேகா மேலும் குறிப்பிடுகிறார்.