மாற்றுத்திறனாளிகள் தமக்கு வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டையை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு பயன்படுத்த முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கேள்வி – வாக்காளர்களின் அடையாளத்தை சரிபார்க்க என்ன கொண்டு வர வேண்டும்?
பதில் – “செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் வாகன அனுமதிப்பத்திரம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதியத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஓய்வூதியம் பெறுபவரின் அடையாள அட்டை, இது எதுவுமே இல்லாதவர்கள் தங்கள் கிராம அலுவலருடன் தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், இம்முறை தற்காலிக அடையாள அட்டையை வழங்கியுள்ளோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊனமுற்ற சமூகம் அவர்களுடைய தற்காலிக அடையாள அட்டையை பயன்படுத்த முடியும்”.