2024 ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவு!

Date:

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்று (14) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் ஜூலை 26 ஆம் திகதி ஆரம்பமாகி இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும் திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, தபால் மூல வாக்குச் சீட்டுக்களை வௌியிடுத்தல் மற்றும் தபாலுக்கு வழங்குதல் 26.08.2024 அன்று இடம்பெறும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, மாவட்ட செயலகம், தேர்தல் அலுவலகங்கள், பொலிஸாருக்கு தபால் மூல வாக்குப்பதிவு செப்டம்பர் 4 ஆம் திகதி இடம்பெறும்

இதேவேளை, தபால் மூலம் வாக்களிக்கக் கோரிய ஏனைய தரப்பினருக்கு செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

குறியிடப்படாத தபால் வாக்குகளுக்கான மறுகுறிப்பு திகதி செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...