ஏ9 வீதி மாங்குளம் விபத்தில் மூவர் பலி

Date:

ஏ9 வீதியில் மாங்குளம், பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியின் பின்புறம் வேன் மோதியதில், லொறிக்கு முன்னால் இருந்த மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்பக்க லொறியின் சாரதி லொறியில் இருந்து கீழே இறங்கியதில் இரண்டு லொறிகள் மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளான அவர் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை லொறியின் பின்பகுதியில் பயணித்த ஒருவரும் முன் இருக்கையில் பயணித்த நபரும் உயிரிழந்துள்ளனர்.

வேனில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

முல்லேரிய புதிய நகரம், வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடைய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும் வேனில் பயணித்த மூன்று பெண்களும் லொறியில் பயணித்த ஆண் ஒருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் லொறியில் பயணித்த மூன்று ஆண்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

விபத்து தொடர்பில் வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....