இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முதலாவது பொதுக்கூட்டம் இன்று (17) பிற்பகல் அனுராதபுரம் சல்தாது விளையாட்டரங்கில் ஆரம்பமானது.
பிரதமர் தினேஸ் குணவர்ண உட்பட அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியுள்ள பெருமளவான எம்.பிகளும் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.