வழக்கறிஞர் அச்சல செனவிரத்ன தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கு தொடர்பானது.
கடற்படைக் குழுவினால் இளைஞர்கள் குழுவொன்று கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பான வழக்கின் நடவடிக்கைகளில் உதய கம்மன்பில தொடர்ந்து தலையிடுவதன் மூலம் நீதித்துறை செயல்முறைக்கு இடையூறு விளைவிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அச்சல செனவிரத்ன, கடந்த 12 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையிடம் புகார் அளித்திருந்தார்.