இவ்வருடம் தேர்தல் கடமைகளுக்காக 200,000 – 225,000 இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான அரச ஊழியர்களை ஈடுபடுத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 13000 இற்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது அனைத்து வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.