மலேசிய பிரதமர் அலுவலக இணை அமைச்சருடன் இ.தொ.கா தலைவர் சந்திப்பு!

0
357

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், மலேசிய பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் குலசேகரன் மற்றும் பிரதமரின் சிறப்பு செயலாளர் சண்முகம் ஆகியோரை சந்தித்து, கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது, இலங்கைக்கு மலேசியாவிற்கும் இடையிலான நீண்டகால நட்பு குறித்து நினைவூட்டப்பட்டது.

மேலும் சர்வதேச அரசியல் அரங்கில் தமிழர்களின் நிலையான அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டும் எனவும், தமிழ் மக்களின் எதிர்கால வளர்ச்சி குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here