ரணில் இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தினால் ஆபத்து

0
152

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியாவுடன் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

“ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியா சென்றார். இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. கடந்த முறை ரணில் விக்கிரமசிங்க கைச்சாத்திட்ட ஒப்பந்தம் என்ன? மின் இணைப்புகள் மூலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட நாடு, எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள் மூலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட நாடு, நாணயத்தால் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட நாடு, இந்தியாவுடன் கலாச்சார ரீதியாக இணைக்கப்பட்ட மக்கள், இந்தியாவுடன் விமானம், தரை மற்றும் கடல் மூலம் இணைக்கப்பட்ட நாடு.

இது என்ன எந்த பிரச்சினையும் இல்லையா? ஒரு பிரச்சனை உள்ளது. நாம் எந்த நாட்டுடனும் வர்த்தகம் செய்ய வேண்டும், வேறு எந்த நாட்டுடனும் வர்த்தகம் செய்ய சுதந்திரமாக இருக்க வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இந்தியாவைத் தவிர வேறு எந்த அரசியல், பொருளாதார முடிவையும் எடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். தற்போது ரணில் விக்கிரமசிங்க கையொப்பமிட்டுள்ளார். நாட்டின் எதிர்காலத்துடன் மிகவும் முக்கியமானதாகப் பிணைந்துள்ள இவ்வாறான ஆபத்தான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் வழங்கிய ஆணை என்ன? அத்தகைய ஆணை எதுவும் வழங்கப்படவில்லை.”

காலியில் நடைபெற்ற ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here