மண்ணெண்னை விலை அதிகரிப்புக்கு பல தரப்பினரும் கண்டனம்

0
161

மண்ணெண்னை விலை அதிகரிக்கப்பட்டதால் மீனவர்கள் மற்றும் பெருந்தோட்ட மக்கள், கிராமபகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் .

அதனால் விலை உயர்வை அவர்கள் கண்டித்து வீதிக்கு இறங்கத் தீர்மானித்துள்ளனர்.

மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலையை நள்ளிரவு முதல் அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 87 ரூபாவிலிருந்து 340 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 253 ரூபாவால் மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலையை அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here