கட்சித் தலைவர்களுக்கு பாராளுமன்றில் விசேட கூட்டம்

Date:

நாடாளுமன்றத்தின் எதிர்கால பணிகள் குறித்து முடிவு செய்வதற்காக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் சிறப்புக் கூட்டம் நாளை (24ம் திகதி) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை சபை ஒத்திவைக்கப்படும் வேளையில் மின்சாரக் கட்டணத்தை 75 வீதத்தால் அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சமகி ஜன பலவேகய கட்சியினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த நான்கு மாதங்களுக்கான செலவினங்களுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (இடைக்கால வரவு செலவுத் திட்டம்) மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இம்மாதம் 30, 31 மற்றும் 1ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

அடுத்த மாதம் 2ம் திகதி வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த 9ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணிலுக்கு ஆதரவாக மைத்திரி வருகை

அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி...

இருளில் நடக்கும் ரணில் வழக்கு!

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு தொடர்பான...

UNP விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பிணை...

திருத்தம் – ரணில் தொடர்பில் விசாரணை தொடர்கிறது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிணை மனு இன்னும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக...