கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவது தொடர்பான புதிய அறிவிப்பு

0
190
File Photo
File Photo

தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் செப்டெம்பர் மாத தொடக்கத்தில் இலங்கைக்கு வரத் தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்ச இன்று (24ஆம் திகதி) இலங்கைக்கு வரவுள்ளதாக அவரது நெருங்கிய உறவினர்கள் முன்னதாக அறிவித்திருந்ததையடுத்து, பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சிலர் அவரை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் செல்ல தயாராக இருந்தனர்.

எனினும், முன்னாள் ஜனாதிபதியின் வருகை இரண்டு வாரங்கள் தாமதமாகியுள்ளதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் இந்த நாட்களில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பாதுகாப்பு மற்றும் வசதிகளை வழங்குவது தொடர்பில் அவசரமாக ஆராயுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here