ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பதவிகளில் மாற்றம் மஹிந்த ,ஜி.எல்.பீரிஸ் உள்ளடங்கலாக

0
216

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதவிகளில் மாற்றம் செய்யவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில் இந்த நிலைப்பாடுகள் மாற்றப்படும் என்றார்.

கட்சி எடுத்த அரசியல் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்ட முக்கிய பதவிகளை வகிப்பவர்கள் அப்பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் கோத்தபாய ராஜபக்சவின் பதவி விலகலுக்குப் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு கட்சியாக ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது எனவும்

ஆனால் கட்சியின் கருத்தைப் பொருட்படுத்தாமல் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதோடு கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவருக்கு ஆதரவளித்தார். முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர்களை அந்தப் பதவிகளில் இருந்து நீக்கும் சூழல் கட்சியில் உருவாகியுள்ளது எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here