தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் துண்டுப்பிரசுர வழங்களுக்கு பொலிஸார் எதிர்ப்பு

Date:

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரி வடக்கு – கிழக்கில் துண்டுப்பிரசுரம் வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில், இன்று அம்பாறை – திருக்கோவில் பகுதியில் துண்டுபிரசூரம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக பொலிஸார் இடையூறு விளைவித்துள்ளனர்.

தேர்தலை புறக்கணிக்க கோருவது சட்டவிரோதம் எனவும், நல்லிணக்கத்தோடு உள்ள திருக்கோவில் பகுதியில் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த, கஜேந்திரன் எம். பி தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழ் மக்களுக்கு முறையான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதையே தாம் வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

இதன்போது இரு தரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இந்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த பொலிஸார் அவர்களை திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட பகுதிக்கு அப்பால் செல்லும் வரை கண்காணித்ததாகவும் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....