இராஜாங்க அமைச்சர்கள் விடுக்கும் கோரிக்கை

0
60

அமைச்சரவை அமைச்சர்கள் தமது அமைச்சுக்களுக்கான பொறுப்புகளை இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்காத காரணத்தினால் அரசாங்கத்திற்குள் சில பிரச்சினைகள் தலைதூக்குவது இரகசியமல்ல.

அண்மைய நாட்களில் சில இராஜாங்க அமைச்சர்கள் இது குறித்து பொதுவெளியில் பேசியிருந்தனர்.

இந்நிலைமை காரணமாக வர்த்தமானி மூலம் நிறுவனங்கள் ஒதுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்க இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று தீர்மானித்துள்ளது.

நேற்று ஒரு இராஜாங்க அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய சுமார் 22 இராஜாங்க அமைச்சர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதியின் கீழ் உள்ள இராஜாங்க அமைச்சுக்களின் பொறுப்புகள் தமக்கே வழங்கப்பட்டுள்ளதால், அந்த விடயங்களை வர்த்தமானியில் வெளியிட வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதியின் கீழ் உள்ள இராஜாங்க அமைச்சர்கள் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஏனைய இராஜாங்க அமைச்சர்கள் தமது நிறுவனங்களை வர்த்தமானியில் அறிவித்து தனியான அமைச்சுச் செயலாளர்களை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க தயாராக உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here