ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்கவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை தெரிவிக்க இணைந்துள்ளார்.
நேற்று (26) கொழும்பு மால் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்திற்கு வந்த விமலவீர திஸாநாயக்க, ஜனாதிபதியின் வெற்றிக்காக தம்மை அர்ப்பணிப்பதாக உறுதியளித்தார்.