பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணியினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை 50,000 ரூபா நீதிமன்ற கட்டணத்திற்கு உட்பட்டு நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.