மீசாலைப் பகுதியில் தேக்கு மர கடத்தல்

0
212

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலைப் பகுதியில் வைத்து ரூ. 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான தேக்கு மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (28) திங்கட்கிழமை கனகராயன்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி டிப்பர் வாகனத்தில் கருங்கல் தூளுக்குள் மறைத்து எடுத்து வரப்பட்ட 22 தேக்கு மரக் குற்றிகளே பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை மூலமாக இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து குறித்த வாகன சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீசாலை பகுதியில் கடமையில் நின்றிருந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரே குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். இதன்போது சந்தேகநபர் பொலிஸாருக்கு ரூ. 5 இலட்சம் இலஞ்சம் வழங்க முற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையிலான பொலிஸ் குழுவினரே குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.கைதான சந்தேகநபரை இன்று (29) நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here