அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆட்சியில் இடமில்லை

Date:

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அரசியல் பழிவாங்கல்கள் மேற்கொள்ளப்படமாட்டாது என்பதுடன், மக்களின் பணத்தினை கொள்ளையடித்தவர்கள் நிச்சயமாக சட்டத்தின் முன்னிறுத்தப்படுவார்கள் என கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டை வீழ்ச்சியில் இருந்து கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் ஒரு போது ஊழல்வாதிகளை இணைத்துக்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை கந்தளாய் சேருவில பகுதியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”செப்டெம்பர் 21 தேர்தலன்று யாரை தெரிவு செய்யவேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்பது இப்போது தெளிவாக தெரிகின்றது.

தேசிய மக்கள் சக்தியின் வேலைத்திட்டங்களில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே செப்டெம்பர் 21 ஆம் திகதியன்று நாம் அமோக வெற்றியீட்டி நாட்டின் ஊழல் ஆட்சிப்பு முற்றுப்புள்ளி வைப்போம்.

தூய்மையான அரசியல் கலாசாரத்தினை ஏற்படுத்துவோம். வரலாற்றில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். அதாவது தேர்தல் நெருங்கிவரும் வரை மக்கள் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

மக்கள் நாட்டிற்காக ஒன்றிணைந்துள்ளனர் நாட்டை வெற்றியடையச் செய்யும் கூட்டணி தேசிய மக்கள் சக்தியுடனஇணைந்துள்ளனர்.

22 ஆம் திகதியில் இருந்து இந்த நாட்டில் கட்சி இன மத வேறுபாடின்றி மக்களை ஒன்றிணைத்து புதிய ஆட்சி அமைப்போம். இந்த நாட்டிற்கு புதிய அரசியல் கலாசாரம் ஒன்றே தேவைப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தியி;ன் ஆட்சியில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது. ஆனால் ஊழல்வாதிகளை சட்டத்தின் முன்னிறுத்துவோம்.

மக்களின் பணத்தினை கொள்ளையடித்தவர்கள் நிச்சயமாக சட்டத்தின் முன்னிறுத்தப்படுவார்கள் நாம் நாட்டை வீழ்ச்சியில் இருந்து கட்டியெழுப்புவோம்.

நாம் மக்களுடனேயே ஒன்றிணைந்து செயற்படுவோம். மக்களின் பணத்தினை கொள்ளையிட்டு மக்களை வறுமைப் பிடியில் சிக்க வைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்” என அநுரகுமார திசாநாயக்க மேலும் தொிவித்தாா்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...