இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இன்று (30) பிற்பகல் கொழும்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவுகின்ற அரசியல் தொடர்புகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் சார்ந்த அரசியல் நிலைமைகள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத்தும் இத்தருணத்தில் பங்கேற்றார்.