அரசியல் பழிவாங்கல்களுக்கு எமது ஆட்சியில் இடமில்லை

0
30

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறாதென்றும், மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்கள் நிச்சயமாக சட்டத்தின் முன்னிறுத்தப்படுவரெனவும் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டை வீழ்ச்சியிலிருந்து கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தில் ஒரு போதும் ஊழல்வாதிகளை இணைத்துக் கொள்ளப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். திருகோணமலை, கந்தளாய், சேருவில பகுதியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின், பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடா்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

செப்டெம்பர் 21 தேர்தலன்று யாரை தெரிவு செய்யவேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்துவிட்டனர். இது, இப்போது தெளிவாக தெரிகிறது.

தேசிய மக்கள் சக்தியின் வேலைத்திட்டங்களில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே செப்டெம்பர் 21இல், நாம், அமோக வெற்றியீட்டி நாட்டின் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். தூய்மையான அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவோம். வரலாற்றில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். அதாவது தேர்தல் நெருங்கி வரும் வரை மக்கள் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். மக்கள் நாட்டுக்காக ஒன்றிணைந்துள்ளனர். நாட்டை வெற்றியடையச் செய்யும் கூட்டணி தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளது. நாட்டில் கட்சி, இன, மத வேறுபாடின்றி மக்களை ஒன்றிணைத்து புதிய ஆட்சி அமைப்போம். இந்த நாட்டுக்கு புதிய அரசியல் கலாசாரம் ஒன்றே தேவைப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது. ஆனால், ஊழல்வாதிகளை சட்டத்தின் முன்னிறுத்துவோம்.

மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்கள் நிச்சயமாக சட்டத்தின் முன்னிறுத்தப்படுவர். நாம் நாட்டை வீழ்ச்சியிலிருந்து கட்டியெழுப்புவோம்.

மக்களுடனேயே ஒன்றிணைந்து செயற்படுவோம். மக்களின் பணத்தை கொள்ளையிட்டு, மக்களை வறுமைப் பிடியில் சிக்க வைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here