தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காரும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் காரின் சாரதி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 118 கிலோமீற்றர் தூரத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கார் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கொழும்புப் பகுதியிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற லொறியுடன் மோதியதாகவும், மோதியதன் பின்னர் கார் வீதியை விட்டு விலகி மீண்டும் வீதியில் வீழ்ந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
காரின் சாரதி மாத்திரம் பயணித்ததாகவும், சம்பவத்தின் போது, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் குழுவொன்று இவ்வீதியில் பயணித்ததாகவும், இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.