ரவி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வருகை

0
137

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் இன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) முன்னிலையில் ஆஜராகி உள்ளார்.

தேசிய லொத்தர் சபையின் ஊழியர்கள் சிலரை அரசாங்க ஊதியத்தில் தமது அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி, அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் தனிப்பட்ட காரணங்களைக் கூறி அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகத் தவறியிருந்தார். இதன் காரணமாக அண்மையில் அதிகாரிகள் அவரது இல்லத்திற்கும் சென்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவித்திருந்தனர்.

எவ்வாறாயினும், சட்டத்தரணிகள் ஊடாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய வழங்கப்பட்ட புதிய திகதியின்படி, பாராளுமன்ற உறுப்பினர் இந்த விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here