23 வேட்பாளர்கள் மாயம்: தேர்தல்கள் ஆணைக்குழு

Date:

இலங்கைத்தீவு இம்மாதம் 21ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்றில் முதன் முறையாக 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலையாகியுள்ள வேட்பாளர்களுள் 23 பேரின் தற்போதைய நிலை தொடர்பில் எந்தத் தகவலும் இல்லை என கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொது மக்களுக்கான கூட்டங்களை நடத்தி தேர்தல் வியாபாரங்களை நடத்தி செல்வது சுமார் 15 வேட்பாளர்கள் மாத்திரமே எனவும் அறியக் கிடைத்துள்ளது.

அதேபோல், குறித்த வேட்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ள தொலைபேசி இலக்கங்கள் கூட போலியானவை என தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது பிரதான நான்கு கட்சிகளும் தமது தேர்தல் பிரச்சாரங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஷம்மி சில்வாவை அகற்றும் முடிவு பொய்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவை அந்த பதவியில் இருந்து...

1000 கோடி தர முடியாது – சட்டத்தின் ஊடாக மோதி பார்ப்போம்!

விவசாயம், நிலம், பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்தின்...

NDB விவகாரம் CID அலசல்!

நம்பகமான தகவல்களின் படி, தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (NDB)யில் இடம்பெற்றதாக...

மன்னிப்பே கிடையாது!

தனது சொத்து மற்றும் கடன் அறிக்கைகள் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்ட...