450 கிராம் பான் ஒன்றின் விலை 300 ரூபாயாக உயர்வு!

0
220

சந்தையில் கோதுமை மாவின் விலைக்கு அமைவாக 450 கிராம் பாண் ஒன்று சுமார் 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக அகில இலங்கை பேக்கரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 50 கிலோகிராம் கோதுமை மா மூட்டை 20,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட உள்ளதாக சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக பல பேக்கரிகள் இயங்க முடியாமல் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here