முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்னர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை மீள ஆராய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல குறிப்பிடுகின்றார்.
கோட்டாபய ராஜபக்சவுக்கு ஜனாதிபதியின் விலக்குரிமை இல்லாததால், அந்த வழக்குகளை மீண்டும் தொடர முடியும் என்றும் அவர் கூறினார்.
நாட்டை வங்குரோத்து செய்ததற்கு கோட்டாபய ராஜபக்ஷவும் ஏனைய குடும்ப உறுப்பினர்களும் முக்கியப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எம்.பி. இவற்றை தெரிவித்தார்.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் பிரகாரம் தண்டிக்கப்பட வேண்டுமென முன்னாள் பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.