தமிழக மீனவர்கள் ஐவர் விடுதலை

Date:

ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை அளித்த நிலையில் மூவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 27ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற படகையும் படகில் இருந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

8 பேரின் வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரபீக் முதல் முறையாக எல்லை தாண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட 5 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை பணம் தலா ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் நிபந்தனை விதித்திருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

அதே போல் எஞ்சியுள்ள 3 மீனவர்கள் 2 வது முறையாக அத்துமீறி மீன்பிடித்ததான குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் 6 மாத சிறை தண்டனையும் தலா ரூ.50 ஆயிரம் இலங்கை பணம் கட்ட நிபந்தனையுடன் 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.

விடுதலை செய்யப்பட்ட 5 பேரின் அபராத தொகையை இந்திய துணை தூதரக அதிகாரி அலுவலகம் மூலமாக செலுத்துவதாக நீதிமன்றத்தில் வாக்குறுதி கொடுத்ததால் 5 மீனவர்களையும் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

இந்திய பணத்திற்கு தலா ரூ.20,000 ஆக ரூ.1 லட்சம் செலுத்தினால் 5 பேரும் விடுதலை செய்யப்பட்டு இரண்டு, மூன்று தினங்களுக்குள் இந்தியாவுக்குள் வர இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொலைக்கு உதவிய சட்டத்தரணி கைது

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் ஒரு...

ரணில் மீதான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக லண்டன் தனிப்பட்ட பயணத்திற்காக பொது...

காணாமல் போனவர்களின் 35வது வருடாந்த நினைவு நாள்! (புகைப்படங்கள்)

கொழும்பு LNW: சீதுவவில் உள்ள ரத்தொலுவ காணாமல் போனவர்களின் நினைவு நாள்...

நுகேகொட கூட்டு எதிர்கட்சி பேரணியில் SJB இல்லை

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...