வாக்களிப்புக்கான விடுமுறை தொடர்பில் விசேட அறிவித்தல்

0
171

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு தேர்தலின் போது விடுமுறை வழங்குவது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய இழப்பு அல்லது தனிப்பட்ட விடுப்பு இல்லாமல் வாக்களிக்க ஏதுவாக விடுமுறை அமல்படுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, பணியிடத்தில் இருந்து வாக்குச்சாவடிக்கு 40 கிலோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான தூரம் இருந்தால் ஒரு ஊழியருக்கு அரை நாள் விடுமுறையும், 40-100 கிலோமீட்டர் தூரம் இருந்தால் 1 நாள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 100-150 கி.மீ வரை இருந்தால் 1 1/2 நாட்கள் விடுப்பும், 150 கி.மீ.க்கு மேல் இருந்தால் இரண்டு நாட்கள் விடுப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில வாக்காளர்கள் தங்களது வாக்குச் சாவடிகளுக்குச் சென்று பணியிடங்களுக்குத் திரும்ப மூன்று நாட்கள் ஆகும் சம்பவங்கள் கணிசமான அளவில் இருப்பதாகவும், எனவே அந்த சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியாளர்கள் எழுத்துப்பூர்வ மூலம் விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு தொழில் வழங்குனரும் சிறப்பு விடுப்புக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் விடுப்பு வழங்கப்படும் காலத்தை குறிக்கும் ஆவணத்தை தயார் செய்து அதனை பணியிடத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here