ஊடகப் படுகொலைகள் பற்றிமுழுமையான விசாரணைகள் – ஜனாதிபதி வேட்பாளர் அநுர உறுதி

Date:

ஊடகப் படுகொலைகள் பற்றிமுழுமையான விசாரணைகள்! – ஜனாதிபதி வேட்பாளர் அநுர உறுதிஇலங்கையில் பல்வேறு ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை என்பன தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேர்தல் பரப்புரைகளுக்காக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த அவர், ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து நீதி நிலைநாட்டப்படும் என்பதில் நான் மிக ஆழமான உறுதியுடன் உள்ளேன். இந்தக் குற்றங்கள் நிகழ்ந்து எத்தனை வருடங்கள் கடந்திருந்தாலும் நிச்சயமாக நீதியென்பது நிலைநாட்டப்பட்டே தீரும். அனைத்து வழக்குகள் தொடர்பிலும் நான் தீர்க்கமாக விசாரிப்பேன்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஷம்மி சில்வாவை அகற்றும் முடிவு பொய்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவை அந்த பதவியில் இருந்து...

1000 கோடி தர முடியாது – சட்டத்தின் ஊடாக மோதி பார்ப்போம்!

விவசாயம், நிலம், பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்தின்...

NDB விவகாரம் CID அலசல்!

நம்பகமான தகவல்களின் படி, தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (NDB)யில் இடம்பெற்றதாக...

மன்னிப்பே கிடையாது!

தனது சொத்து மற்றும் கடன் அறிக்கைகள் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்ட...