நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் பெருமளவில் நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
“கடந்த 8 மாதங்களில், இந்த நாட்டின் சுகாதார சேவை மற்றும் மருத்துவமனை அமைப்பில் இருந்த சுமார் 500 மருத்துவர்கள் தற்போது இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர்.
இது மிகவும் பாரதூரமான விடயம். கடந்த இரண்டு மாதங்களில், குறிப்பாக இந்த மருத்துவர்கள் இறுதியாக இந்த சூழ்நிலையில் முன் அறிவிப்பு இன்றி தங்கள் தொழிலை கைவிட்டு வெளிநாடு சென்றுள்ளனர்.
சுகாதார அமைச்சகத்திற்கு தெரிவிக்காமல் சென்ற 50க்கும் மேற்பட்டோருக்கு சேவையை கைவிட்டு சென்றதாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவை ஒரு சில புள்ளிவிவரங்கள் மட்டுமே.”
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று (09) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் இதனைத் தெரிவித்தார்.