“ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கான காலவரையறைகள் தொடர்பில் அவருடன் நான் நேரில் கலந்துரையாடி விசேட குழுவுக்கு அறிவிப்பேன். எனவே, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் விசேட குழு கூட்டம் தொடர்பில் அவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் நேற்றைய கூட்டம் தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெற இருந்த தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கட்சியின் மத்திய செயற்குழு முடிவெடுத்ததன் காரணமாக மீண்டும் மத்திய செயற்குழுவைக் கூட்ட வேண்டிய தேவை இல்லை என்பதனால் அது இரத்துச் செய்யப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் பின்னர் கூடலாம். தற்போது அதற்கான தேவை இல்லை என்பதன் அடிப்படையிலேயே அந்தக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாங்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு எனத் தெரிவித்ததன் அடிப்படையில் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாகாண சபை விடயம், புதிய அரசமைப்பை உருவாக்குவது தொடர்பான விடயம் உட்பட பல்வேறு விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான காலவரையறை தொடர்பாக சஜித்துடன் பேசி ஓர் இணக்கப்பாட்டுக்கு வருவது என முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் குறித்த காலவரையறைகள் தொடர்பாக சஜித் பிரேமதாஸவுடன் நான் நேரில் கலந்துரையாடியதன் பின்னர் அதில் எட்டப்பட்ட தீர்மானங்களை இந்த விசேட குழுவுக்கு அறிவிப்பது எனவும் கலந்துரையாடப்பட்டது.” – என்றார்.