அமைச்சரவை பதவியேற்பு மீண்டும் ஒத்திவைப்பு

Date:

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் 37 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதிலும் அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வார இறுதியில் இங்கிலாந்து செல்லவுள்ளார். அது இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக.

அதன் பிறகு தான் முன்பு தயார்படுத்திய ஜப்பான் பயணத்திற்கு புறப்பட வேண்டும். மேலும், 22வது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளும் அதே நேரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதன் காரணமாக புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சைக்காக...

ரணில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (23)...

ரணில் நியமித்த ஆளுநருக்கு அழைப்பாணை

2015ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணைமுறி மோசடி...

இது பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறில்லை

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிட முன்னாள்...