ஐ.நா சபை தீர்மானத்தை நிராகரித்து தமது உறுதியான நிலைப்பாட்டை அறிவித்தது இலங்கை

Date:

இலங்கை மக்களின் இறையாண்மையை ஐக்கிய நாடுகளின் சாசனம் மீறுவதால் 46/1 தீர்மானத்தை இலங்கை திட்டவட்டமாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

தீர்மானம் மற்றும் உயர் ஸ்தானிகரின் அது தொடர்பான பரிந்துரைகள் மற்றும் எந்தவொரு தொடர் நடவடிக்கைகளையும் திட்டவட்டமாக நிராகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது என்றார்.

ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் இந்த விடயத்தை அவர் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு பதிலாக, விரிவான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை இலங்கை கொண்டுவரும் எனவும் அவர் உறுதியளித்தார்.

முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில், ஜனநாயக ஆட்சியை வலுப்படுத்தும் மற்றும் முக்கிய நிறுவனங்களின் சுயாதீன மேற்பார்வை, பொது ஆய்வு, நிர்வாகத்தில் பங்கேற்பது மற்றும் ஊழலை எதிர்த்தல் ஆகிய முக்கிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கையை மனித உரிமைகளுக்கான பதில் உயர்ஸ்தானிகர் நடா அல்-நஷிப், சமர்ப்பித்திருந்தார்.

அறிக்கையை முன்வைத்த அவர், இலங்கையின் நிலைமை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...