சாம்பியா இலங்கை நட்புறவு சங்கத்தின் ஊடாக, இலங்கையின் சுகாதார அமைச்சுக்கு 1150 ரேபிஸ் தடுப்பூசிகளை சாம்பியாவில் உள்ள இலங்கையர்கள் அண்மையில் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
இந்த நன்கொடையானது, ரொனி பீரிஸ் அவர்களுடன் இணைந்து சாம்பியாவுக்கான இலங்கையின் தூதுவர் எல்மோ ஜயதிலக அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டதுடன், சுகாதார அமைச்சின் வைத்தியர் அன்வர் ஹம்தானி இலங்கையிலிருந்து ஒருங்கிணைத்தார்.
தூதுவரின் கூற்றுப்படி, சாம்பியாவில் உள்ள இலங்கையர்களும் தமது தனிப்பட்ட திறன்களில் சுமார் 10,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.