மகன் கைதான மன வேதனையில் தாய் தூக்கிட்டு தற்கொலை!

0
146

தனது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையினால் மனவேதனை அடைந்த 44 வயதுடைய தாயொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மஹவ பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக மஹவ பொலிஸாரிடம் நாம் வினவிய போது, உயிரிழந்த பெண்ணின் மகன் மேலும் மூன்று இளைஞர்களுடன் சேர்ந்து ஒருவரை தாக்கியதாகவும், அந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து வெளியேறியதாகவும் பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ பண்டாரநாயக்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த தாக்குதலின் அடிப்படையில் குறித்த பெண்ணின் மகன் சந்தேக நபராக கைது செய்யப்பட்டு மஹவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மகன் கைது செய்யப்பட்டதன் காரணமாக இந்த தாய் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆனால் மகன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சட்டத்தின் பிரகாரம் அவரது மகன் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here