விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ச இந்த நாட்டில் விளையாட்டுத்துறையில் ஆற்றிய பணியின் காரணமாக ஒரே நேரத்தில் இரண்டு விளையாட்டுகளில் ஆசியாவின் சம்பியனாக மாற முடிந்தது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷ விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில் விளையாட்டு சங்கங்களுக்கு சுதந்திரமாக செயற்படுவதற்கான வாய்ப்பை வழங்கியதாகவும் அரசியல் தலையீடுகள் இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.
மதுர விதானகே மேலும் தெரிவிக்கையில், விளையாட்டுத் துறையில் சிறந்த அறிவையும் அனுபவத்தையும் கொண்டவர் நாமல். இலங்கை அணியில் இணைந்த இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை விளையாட்டுக் கழகங்களில் இருந்து கண்டுபிடித்து தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு உதவியவர் நாமல் ராஜபக்சவே.
இவ்வாறான திறமையான அரசியல்வாதிக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அமைச்சுப் பதவியை வகித்து நாட்டுக்கு தொடர்ந்து சேவையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் மதுர விதானகே குறிப்பிடுகின்றார்.