ஜெனீவா செல்லும் சுமந்திரன், இலங்கைக்கு மேலும் நெருக்கடி

0
228

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கும் நாடுகளின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் ஜெனிவா சென்றுள்ளார்.

அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ள கூட்டமொன்றில் நாளை (15) தான் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரித்தானியா தலைமையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை குறித்து சர்வதேச நாடுகளுடன் கலந்துரையாடலொன்று எதிர்வரும் வௌ்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனக்கு கிடைத்த அழைப்பிற்கமைய, அந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக M.A.சுமந்திரன் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here