கையிலிருக்கும் கிளியை விட்டுவிட்டு மரத்திலிருக்கும் குருவியைப் பிடிக்க முயலாதீர்கள் – பிரசாரக் கூட்டத்தில் ஹரின்

Date:

“சரியான தீர்மானத்தை எடுக்காவிட்டால், இருள் யுகத்தில் வாழ வேண்டும் என்பதை மறக்காமல் மக்கள் வாக்களிக்க வேண்டும். எனவே, கையிலிருக்கும் கிளியை விட்டுவிட்டு மரத்திலிருக்கும் குருவியைப் பிடிக்கச் சென்றால் இரண்டும் கிடைக்காது என்பதை மக்கள் நினைவில்கொள்ள வேண்டும்.”

– இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பேருவளை கடற்கரை விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் முடியும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இன்று இருக்கும் நிலை வேண்டுமா? கஷ்ட காலத்தை நோக்கி மீண்டும் செல்ல வேண்டுமா? என்பதை இன்னும் 8 நாட்களில் தீர்மானிக்க முடியும். இதே இடங்களில் இரண்டு வருடங்களுக்கு முன்பு எத்தனை நாட்கள் வரிசையில் நின்றோம் என்பதை மறக்கக்கூடாது.

பிரச்சினைகளிலிருந்து மீண்டுவரும் வேளையில் வாய்ச்சொல் வீரர்களை நம்பி மாற்றத்தை செய்து பார்க்கச்  சிந்திப்பது வேடிக்கையானது. அதேபோல் மக்கள் அந்த நிலைமைகளை மறந்திருப்பது வேதனைக்குரியது.

வௌிநாடுகளில் வேலை செய்யும் 15 இலட்சம் பேர் ஜே.வி.பியின் திசைகாட்டிக்கு வாக்களிக்க வருவார்கள் என்று சொல்கின்றார்கள். அப்படி வருவதாயின் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் விமானங்களை இலங்கைக்குக் கொண்டு வர வேண்டியிருக்கும். இவ்வாறான பொய்களை மக்கள் நம்புவது கவலைக்குரியது.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகம்

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) முதல்...

இந்த வரவு செலவு திட்டத்தை தோண்டத் தோண்ட தங்கம் வரும்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்,...

இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை...

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை...