ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு 5000 வழங்கிய வர்த்தகர் கைது

Date:

மூதூர் பிரதேசத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை விளம்பரப்படுத்துவதற்காக அருகில் வசிப்பவர்களுக்கு தலா 5000 ரூபாவை விநியோகித்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து பெரிய முல்லை பாலத்திற்கு அருகில் உள்ள நபரொருவரின் வீட்டில் சந்தேக நபர் பணம் விநியோகித்ததாக மூதூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஜனாதிபதி வேட்பாளரை விளம்பரப்படுத்துவதற்காக அருகில் வசிக்கும் மக்களுக்கு தலா 5000 ரூபாவை விநியோகித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் நோக்கில் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...