அநுர, சஜித் அணிகளின் முக்கியஸ்தர்கள் ரணிலுடன் சங்கமம்

0
62

தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்துகொண்டனர்.

தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் அனுஷ விமலவீர, தேசிய மக்கள் சக்தியின் குண்டசாலை தொகுதி அமைப்பாளர் சிசிர குமார செம்புவத்த மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் விவகார செயலாளர் ஒ.கே. நவாஸ் ஆகியோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து இணைந்து கொண்டனர்.

கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ என்ற தொனிப்பொருளிலான பிராசரக் கூட்டத்திலேயே மேற்படி மூவரும் ரணிலுடன் இணைந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here