கோட்டாவை விடாமல் துரத்தும் மொட்டு கட்சி எம்பிக்கள், அரசியலில் ஈடுபடுமாறும் தொல்லை!

0
194

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கியுள்ள மிரிஹானை வீடு இந்த நாட்களில் மிகவும் பரபரப்பாக காணப்படுகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட்ட கட்சியான பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் தினமும் முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக சிலர் அவரை சந்திக்க வருவதாகவும், அவரை மீண்டும் தீவிர அரசியலுக்கு வருமாறு கோரிக்கை விடுக்க பலர் மிரிஹானேவின் வீட்டிற்கு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அமைச்சர்கள் குழுவொன்று மீண்டும் அரசியலுக்கு வருமாறு கடுமையாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ச பாராளுமன்றத்திற்கு வந்தால் அவரை பிரதமராக நியமிக்க எம்.பி.க்கள் குழுவொன்றும் முயற்சித்து வருகின்றதுடன், அண்மைய நாட்களில் ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் பகிரங்கமாக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், முடிந்தவரை அரசியல் விவகாரங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே முன்னாள் ஜனாதிபதியின் நிலைப்பாடாகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் 2015ஆம் ஆண்டு தோல்வியின் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க முயற்சித்த போதிலும், ஆதரவாளர்கள் உறவினர்களின் பலமான வேண்டுகோளின் காரணமாக மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட நேரிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here